தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 72 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்துள்ளது. 37,406 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020 மார்ச் 30 ஆம் தேதிக்கு பிறகு தற்போது 5வது நாளாக 100க்கும் கீழே கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு 28 ஆக இருந்த நிலையில் இன்று இன்றைய பாதிப்பு 20 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் இன்று ஒருவர் கூட உயிரிழந்துள்ளார். இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 796 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,13,394 ஆக உள்ளது.

