நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று  8,582 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.  

8 ஆயிரத்தை கடந்த கொரோனா:

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,084 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32,30,101 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 4,592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,57,335 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக உள்ளது. 

மேலும் படிக்க: மீண்டும் எகிறி அடிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 8,582 பேர் பாதிப்பு.. 4 பேர் பலி..

அச்சறுத்தும் கொரோனா: 

தற்போது கொரோனா பாதிப்பினால் 47,995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.11 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,771 ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 195.19 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,77,146 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா… 24 மணி நேரத்தில் 249 பேருக்கு தொற்று!!