கொரோனா கோரத்தாண்டவம்.. வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழ்நாடு 4 வது இடம்..

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகியவை முன்னணியில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
 

Corona case india

ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இதுவரை மொத்தம் 115 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு மரணம் இந்தியாவில் பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 24 மணி நேரத்தில் 442 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், மொத்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,60,70,510 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,55,319 பேராக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தினசரி தொற்று விகிதம் 11.05 சதவீதமாக உள்ளது. 

Corona case india

இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய  மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இதுவரை மொத்தம் 115 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். இந்தியாவில் ஒமைக்ரானால் இதுவரை ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளார் என்று அவர் கூறினார். மேலும் அவர் பேசியதாவது, "உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, டெல்டாவை விட ஒமைக்ரான் கணிசமாக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜரோப்பிர நாடுகள், கனடா, டென்மார்க் ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரானுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவாகவே உள்ளது என்றார்.

இந்தியாவில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,55,319 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகியவை முன்னணியில் உள்ளன.  ஐரோப்பாவில் எட்டு நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு மடங்குக்கும் மேல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Corona case india

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 9ஆம் தேதி கோவிட்-19 நிலைமை குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் பின்னர், லேசான மற்றும் மிதமாக பாதிப்படைந்தவர்களுக்கான டிஸ்சார்ஜ் கொள்கையை சுகாதார அமைச்சகம் திருத்தியுள்ளது. அதன்படி, பாசிட்டிவ் சோதனை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குறைந்தது ஏழு நாட்கள் ஆன பிறகு லேசான பாதிப்பு உள்ளவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, எந்தவித அவசர அவசியமில்லாத நிலையில் சோதனைகள் எதுவும் தேவையில்லை'' என்று லாவ் அகர்வால் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios