தமிழகத்தின் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா… சென்னையில் குறைந்தது தினசரி பாதிப்பு!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,903 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,846 ஆக குறைந்துள்ளது.

corona case count decreased below two thousand today in tamilnadu

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,903 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,846 ஆக குறைந்துள்ளது.

இதையும் படிங்க: குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,886 பேருக்கு கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 490 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,225 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,83,346 ஆக உள்ளது.

இதையும் படிங்க: டெங்கு, மலேரியாவிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை... மா.சுப்ரமணியன் முக்கிய தகவல்!!

மாவட்ட வாரியாக: அரியலூர் 5, செங்கல்பட்டு 194, சென்னை 409, கோயம்புத்தூர் 176, கடலூர் 33, தர்மபுரி 13, திண்டுக்கல் 36, ஈரோடு 56, கள்ளக்குறிச்சி 8, காஞ்சிபுரம் 57, கன்னியாகுமரி 42, கரூர் 8, கிருஷ்ணகிரி 40, மதுரை 35, மயிலாடுதுறை 15, நாகப்பட்டிணம் 7, நாமக்கல் 28, நீலகிரி 11, பெரம்பலூர் 3, புதுகோட்டை 17, ராமநாதபுரம் 3, ராணிப்பேட்டை 46, சேலம் 70, சிவகங்கை 26, தென்காசி 22, தஞ்சாவூர் 30, தேனி 45, திருப்பத்தூர் 4, திருவள்ளூர் 82, திருவண்ணாமலை 25, திருவாரூர் 24, தூத்துக்குடி 31, திருநெல்வேலி 48, திருப்பூர் 36, திருச்சி 34, வேலூர் 15, விழுப்புரம் 23, விருதுநகர் 88 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios