தமிழகத்தில் 2வது நாளாக 100க்கும் கீழ் குறைந்த கொரோனா… 14 மாவட்டங்களில் பூஜ்யம் பாதிப்பு!!

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

corona case count decreased below 100 for the 2nd day in tamilnadu

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 40,825 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 95 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 86 ஆக குறைந்துள்ளது. 2020 மார்ச் 30 ஆம் தேதிக்கு பிறகு தற்போது 2வது நாளாக 100க்கும் கீழே கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

corona case count decreased below 100 for the 2nd day in tamilnadu
 
சென்னையில் ஏற்கனவே 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,024 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,054 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 204 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,918 ஆக உள்ளது. 

corona case count decreased below 100 for the 2nd day in tamilnadu
 சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூர் 0, செங்கல்பட்டு 6, சென்னை 33, கோயம்புத்தூர் 11, கடலூர் 2, தர்மபுரி 2, திண்டுக்கல் 0, ஈரோடு 1, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 4, கன்னியாகுமரி 1, கரூர் 0, கிருஷ்ணகிரி 0, மதுரை 0, மயிலாடுதுறை 0, நாகப்பட்டிணம் 0, நாமக்கல் 1, நீலகிரி 2, பெரம்பலூர் 0, புதுகோட்டை 1, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 0, சேலம் 1, சிவகங்கை 2, தென்காசி 0, தஞ்சாவூர் 2, தேனி 0, திருப்பத்தூர் 1, திருவள்ளூர் 2, திருவண்ணாமலை 2, திருவாரூர் 1, தூத்துக்குடி 0, திருநெல்வேலி 2, திருப்பூர் 2, திருச்சி 0, வேலூர் 3, விழுப்புரம் 0, விருதுநகர் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios