கொரோனா கோரதாண்டவம்.. உலகம் முழுவதும் 52 கோடி பேர் பாதிப்பு.. 69 லட்சம் பேர் உயிரிழப்பு..
உலக அளவில் கொரோனா தொற்றில் பலியானவர்களின் எண்ணிக்கை 69 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.76 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் 63,00,325 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,76,81,824 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டு மொத்த அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்த அளிவில் பதிவாகுவதனால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் படிபடியாக தளர்த்தப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றினால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,22 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடி 31 லட்சத்து 38 ஆயிரத்து 393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2,099 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,832 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: India Corona: இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை... 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு!!