Asianet News TamilAsianet News Tamil

Corona 3rd wave :கொரோனா 3 வது அலை..இவையெல்லாம் பொதுவான அறிகுறிகள்..சுகாதாரத்துறை அறிவிப்பு..

கொரோனா மூன்றாம் அலையான ஒமைக்ரான் பரவலின்போது ஏற்படக்கூடிய பொதுவான ஐந்து அறிகுறிகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
 

Corona 3rd wave symptoms
Author
India, First Published Jan 21, 2022, 3:35 PM IST

கொரோனா மூன்றாம் அலையில் ஒமைக்ரான் வகை தொற்று பரவி நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலைகளை ஒப்பிட்டிருக்கிறது மத்திய சுகாதாரத் துறை. குறிப்பாக டெல்லியில் அதிவேகமாக பரவிவரும் ஒமைக்ரான் பரவல் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது. உடல் நடுக்கம் அல்லது நடுக்கமற்ற காய்ச்சல், இருமல், தொண்டையில் எரிச்சல், தசை பலவீனம் மற்றும் சோர்வு ஆகிய 5 பொதுவான அறிகுறிகள் கொரோனா மூன்றாம் அலையில் காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99% நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தென்படுவது சர்வேயில் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். எனினும், காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் 5 நாட்களுக்குப்பிறகு படிப்படியாக குறைந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல், 11 முதல் 18 வயதினருக்கு காய்ச்சலுடன் மேல் சுவாசப்பாதையில் தொற்று ஏற்படுவதாகவும், ஆனால் இந்தமுறை நிமோனியா பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை கிட்டத்தட்ட 94% தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டதாகவும், 72% பேர் 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.இந்தியாவில் தமிழகம், மராட்டியம், கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பேசிய அவர், 'மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளன. 

இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுக்களை அனுப்பி உள்ளோம், தொடர்ந்து நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறோம்.  சிகிச்சையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் முதல் 10 மாநிலங்களாக, மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உள்ளன என்றார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 15-18 வயதுக்குட்பட்ட 52% குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டு தடுப்பூசிகளுக்கு சந்தை அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று DCGI க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேசிய கட்டுப்பாட்டாளரின் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios