corona 3rd wave:’நியோகோவ் வைரஸ்’..மக்கள் நினைத்தால் முடியும்..ஆனால்..? சுகாதாரத்துறை எச்சரிக்கை..
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை வெல்ல மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூகான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் கொரோனா குடும்பத்தை சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அங்கு வாழும் வெளவாலிடம் ‘நியோகோவ்’ கொரோனா வைரஸ் காணப்படுகிறது. இந்த வைரசில் இருந்து ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால் கூட மனிதர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்த கூடியதாகும். ‘நியோகோவ்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் 3-ல் ஒருவர் உயிரிழக்க கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் ‘நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்றும் அது பற்றி பயப்பட வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக விலங்குகளிடையே பரவும் ஒரு வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வேண்டுமென்றால் அதற்கு அந்த வைரஸ் உருமாற்றம் அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர், புதிய வகை நியோகோவ் மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றும் தில்லி, மும்பையில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். கொரோனா 3 வது அலையில் அதிக அளவு முதியோர்கள் தான் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.அதனால் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதன்மை பணியாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 5 சதவீதம் மட்டுமே மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஜனவரி 1 முதல் ஜனவரி 29 வரை 730 பேர் நோய்த்தொற்றால் இறந்து உள்ளனர். அதில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், மேலும் 60 பேர் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியவர்கள். இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் இணை நோய் உள்ளவர்கள். தற்போது வரை தமிழகத்தில் 2.11 லட்சம் நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6.72 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. Neocov என்ற வைரஸ் வவ்வாலுக்கும் வவ்வாலுக்கும் பரவக்கூடியது. உலக சுகாதாரத்துறை அதிகார பூர்வமாக தெரிவிக்கும் வரை இது மனிதர்களுக்கு பரவும் என்ற செய்திகளை தவறாக பரப்ப வேண்டாம். மக்கள் தேவையின்றி பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.