Corona : கொரோனா 3வது அலை நிச்சயம்.. அடித்து சொல்லும் ஐஐடி பேராசிரியர்..

கொரோனா 3வது அலை நிச்சயமாக வரும் என்று கூறி இருக்கிறார்  ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால்.

Corona 3rd wave is confirmed said that iit professor manindra agrawal

தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள ‘ஒமைக்ரான்’ தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. அனைத்து நாடுகளிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது. உருமாறிய புதிய வகை கடந்த மாதம் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Corona 3rd wave is confirmed said that iit professor manindra agrawal

இதனால் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 10 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுனர்கள் குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் இதனை தெரிவித்துள்ளார். 

Corona 3rd wave is confirmed said that iit professor manindra agrawal

இது குறித்து அவர் கூறுகையில்,  ‘ஒமைக்ரான் வைரசால் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது அலை ஏற்படலாம் என்றும், ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும். பிப்ரவரி மாதம் ஒமைக்கரான் வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருக்கும் போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவும் வேகம் கணக்கில் கொண்டு இந்த புள்ளி விபரத்தை தெரிவிக்கிறேன்.

Corona 3rd wave is confirmed said that iit professor manindra agrawal

டெல்டா பரவலின்போது கடைபிடிக்கப்பட்டது போல், இரவு நேர ஊரடங்கு போல் மிதமான ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது ஆகியனவற்றைக் கடைபிடித்தால் பரவல் உச்சம் தொடுவதை தவிர்க்க முடியும். டெல்டாவை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இரண்டு அல்லது 3 வாரங்கள் கழித்துதான் தெரியும்.சிறுவர்களுக்கு கொரோன தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தினால் மட்டுமே பாதிப்பை குறைக்க முடியும்’ என்று கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios