மக்களை காவு வாங்கும் கொரோனா... மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்தது சீனா!!
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 255 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் தீவிர ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 255 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் தீவிர ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவியது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையே சீனாவில் அண்மை காலங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் சீனாவில் செய்வதறியாது தடுமாறி வருகிறது. இதுவரை கொரோனா வைரசை எந்தவொரு நாடும் முழுமையாக அழிக்கவில்லை. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டது.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சாங்சுன், ஜில்லின் மாகாணங்களில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதை அடுத்து கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சீனாவின் வடகிழக்கு பகுதி நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாக சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் தொற்று அதிகரிப்பு தீவிரமாகியுள்ளது. சீனாவின் வடகிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 255 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் வடகிழக்கு நகரமான ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 4,194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 255 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 90 லட்சம் பேர் கொண்ட அந்த மாகாணத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சீன புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், கொண்டாட்டங்களின் விளைவாக தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.