அற்புதம்… 100 கோடி கொரோனா தடுப்பூசி.. இந்தியாவை வாழ்த்திய பில்கேட்ஸ்
100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதன்பின்னர் 60 வயதை கடந்தவர்களுக்கும், பின்னர் 18 வயதை கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த வகையில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. வரலாற்று சாதனையாக கருதப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் இடையே இன்று உரையாற்றிய போது அனைத்து தரப்பினருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து கூறினார். இந்தியாவின் இந்த சாதனை நடவடிக்கைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் உலகத்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:
100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இருப்பது இந்தியாவின் கண்டுபிடிப்பு, கோவின் செயலி உதவி, சுகாதார பணியாளர்களின் முயற்சிக்கு சான்றாக இருக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறி உள்ளார்.