Asianet News TamilAsianet News Tamil

TN Corona: தமிழகத்தில் இன்று 589 பேருக்கு கொரோனா… 208 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 552 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 589 ஆக அதிகரித்துள்ளது. 

589 got corona possitive today in tamilnadu
Author
Tamil Nadu, First Published Jun 17, 2022, 8:07 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 552 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 589 ஆக அதிகரித்துள்ளது. 

corona case count increased above 300 today in tamilnadu
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 286 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,026 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,694 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,18,866 ஆக உள்ளது.

 corona case count increased above 300 today in tamilnadu
மாவட்ட வாரியாக: அரியலூர் 0, செங்கல்பட்டு 119, சென்னை 286, கோயம்புத்தூர் 39, கடலூர் 1, தர்மபுரி 0, திண்டுக்கல் 0, ஈரோடு 7, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 16, கன்னியாகுமரி 20, கரூர் 0, கிருஷ்ணகிரி 0, மதுரை 3, மயிலாடுதுறை 2, நாகப்பட்டிணம் 1, நாமக்கல் 3, நீலகிரி 1, பெரம்பலூர் 2, புதுகோட்டை 1, ராமநாதபுரம் 0, ராணிப்பேட்டை 6, சேலம் 4, சிவகங்கை 3, தென்காசி 1, தஞ்சாவூர் 2, தேனி 1, திருப்பத்தூர் 0, திருவள்ளூர் 35, திருவண்ணாமலை 3, திருவாரூர் 0, தூத்துக்குடி 5, திருநெல்வேலி 9, திருப்பூர் 3, திருச்சி 8, வேலூர் 2, விழுப்புரம் 0, விருதுநகர் 2 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios