தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 105 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 105 ஆக குறைந்துள்ளது. 2020 மார்ச் 30 ஆம் தேதிக்கு பிறகு தற்போது 100க்கும் கீழே கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


சென்னையில் ஏற்கனவே 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 35 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,173 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 223 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,714 ஆக உள்ளது.