TN Corona: தமிழகத்தின் இன்று 29 பேருக்கு கொரோனா… 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 29 ஆக அதிகரித்துள்ளது.

29 got corona positive in tamilnadu in last 24 hours

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனிடையே ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 29 ஆக அதிகரித்துள்ளது.

29 got corona positive in tamilnadu in last 24 hours

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 228 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,910 ஆக உள்ளது. 

29 got corona positive in tamilnadu in last 24 hours

சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூர் 0, செங்கல்பட்டு 6, சென்னை 10, கோயம்புத்தூர் 5, கடலூர் 0, தர்மபுரி 0, திண்டுக்கல் 0, ஈரோடு 0, கள்ளக்குறிச்சி 0, காஞ்சிபுரம் 1, கன்னியாகுமரி 0, கரூர் 0, கிருஷ்ணகிரி 0, மதுரை 1, மயிலாடுதுறை 0, நாகப்பட்டிணம் 0, நாமக்கல் 0, நீலகிரி 0, பெரம்பலூர் 0, புதுகோட்டை 1, ராமநாதபுரம் 0, ராணிப்பேட்டை 0, சேலம் 3, சிவகங்கை 0, தென்காசி 0, தஞ்சாவூர் 0, தேனி 0, திருப்பத்தூர் 0, திருவள்ளூர் 0, திருவண்ணாமலை 0, திருவாரூர் 0, தூத்துக்குடி 0, திருநெல்வேலி 0, திருப்பூர் 0, திருச்சி 2, வேலூர் 0, விழுப்புரம் 0, விருதுநகர் 0 என்ற எண்ணிக்கையில் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios