Corona : ஒரே நாளில் 2,796 பேர் கொரோனாவால் இறப்பு.. 3வது அலை தொடங்கிவிட்டதா ? மீண்டும் லாக்டவுன் ?
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 3 வது அலை வந்துவிட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது.ஒமைக்ரான் உலகம் முழுவதும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனவை விட இது அதிக வீரியமுள்ளது ஆகும். எனவே உலகின் அனைத்து நாடுகளும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது இந்திய அரசு.
பல்வேறு மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு ஒன்றிய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டு நடைமுறை நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களில் இந்த பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 948 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,04,18,707 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்த்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,61,83,065 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,796 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பீகாரில் நேற்று 2,426 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் தொடர்புடைய இன்னொரு தொற்றான ‘ஒமைக்ரான்’ திரிபு ஆனது, உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆனது பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் பட்சத்தில், மீண்டும் லாக்டவுன் வருமா ? என்ற கேள்வியும், ஒருவேளை கொரோனா தொற்றின் 3வது அலை தொடங்கிவிட்டதா ? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.