2021 Corona Heroes : ஆக்சிஜன் மனிதர்கள்.! 2021 கொரோனா காலத்தில் நாயகர்களாக உருவெடுத்தவர்கள்.!

அல்லப்பட்ட மக்களுக்காக ஆக்சிஜன் சேவையை வழங்க தன்னுடைய புது காரையே விற்றார் மும்பையைச் சேர்ந்த ஷானவாஸ் ஷேக். ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க காரை விற்ற அவருடைய மனிதநேயம், தேசத்தின் நாயகனாக்கியது. 
 

2021 Corona Heroes: Oxygen Men! Those who emerged as heroes during the 2021 Corona period.!

கரோனா தொற்று இரண்டாம் அலை நாட்டையே புரட்டிப் போட்டது. மருத்துமவமனையில் படுக்கைக்கு தட்டுப்பாடு, ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு என நாடே தவித்தது. இருந்தாலும் கொரோனாவை பொருட்படுத்தாமல், உதவிக்கு தன்னார்வலர்கள் ஓடோடி வந்தனர். அந்த வகையில் கொரோனா காலத்தில் நாயர்களாக மிளிர்ந்த சிலரைப் பார்ப்போம்.2021 Corona Heroes: Oxygen Men! Those who emerged as heroes during the 2021 Corona period.!

கரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியதுமே பெரிதும் பாதிப்பைச் சந்திக்க தொடங்கியது மகாராஷ்டிராதான். அந்த வகையில் மும்பையிலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு தங்கள் உறவுகளைக் காப்பாற்ற அல்லோலகல்லோலப்பட்டனர். அப்படி அல்லப்பட்ட மக்களுக்காக ஆக்சிஜன் சேவையை வழங்க தன்னுடைய ரூ. 22 லட்சம் மதிப்புள்ள புது காரையே விற்றார் மும்பையைச் சேர்ந்த ஷானவாஸ் ஷேக். ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க காரை விற்ற அவருடைய மனிதநேயம், தேசத்தின் நாயகனாக்கியது. 

2021 Corona Heroes: Oxygen Men! Those who emerged as heroes during the 2021 Corona period.!
மத்தியப்பிரதேசத்தில் ஜாவேத் கான் என்கிற ஆட்டோ ஓட்டுநர் செய்த செயலும் நாடு தழுவிய அளவில் பேச வைத்தது. கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக் தன்னுடைய ஆட்டோவில் ஒரு நோயாளி சுவாசிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டரையும் தேவையான கருவிகளையும் வாங்கிப் பொருத்தி வைத்தார். கிட்டத்தட்ட ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் போலவே மாற்றியிருந்தார். ஆட்டோவில் கொரோனா நோயாளிகளை இலவசமாகவும் அழைத்தும் சென்றார். இதற்கான மனைவியின் நகைகளை அடமானம் வைத்து, இந்த உன்னத சேவையை செய்தார் ஜாவேத் கான்.

 2021 Corona Heroes: Oxygen Men! Those who emerged as heroes during the 2021 Corona period.!

கொரோனாவால் ஆக்சிஜன் கிடைக்காமல் அல்லாடிய வேளையில் பிஹாரில் ‘ஆக்சிஜன் மனிதன்’ எனப் பெயரெடுத்தார் பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய். 2020-ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர் கவுரவ் பாய். அப்போது  மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார். ஆக்சிஜன் சிலிண்டருக்காக அவருடைய மனைவி அலைந்து திரிந்தார். அப்படி வாங்கிவந்த ஆக்சிஜன் சிலிண்டரால்தான் அவர் பிழைத்தார். தான் பட்ட கஷ்டத்தை பிறர் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணியவர், கொரோனா இரண்டாம் அலையில் களமிறங்கினார். வீட்டில் சொந்தப் பணத்தில் ‘ஆக்சிஜன் வங்கி’ ஒன்றை கவுரவ் ராய் தொடங்கினார். தினமும் 10 கிலோ எடை கொண்ட 200 ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தேவைப்படுவோருக்கு நேரடியாக சென்று வழங்கினார். எவ்வளவு தொலைவில் இருந்து அழைப்பு வந்தாலும் காரில் ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு போய் கொடுத்தார். இதன்மூலம் ஆக்சிஜன் மனிதன் என்று புகழப்பட்டார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios