தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 185 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 185 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 94 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,077 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,17,595 ஆக உள்ளது.

