பல நடிகர்கள் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து ஜொலித்து கொண்டு இருக்கின்றனர். அப்படி வானொலியில் இருந்து வெள்ளித்திரை வந்து காமெடியில் கலக்கிக்கொண்டிருப்பவர் RJ பாலாஜி. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சமீபத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து வெளிவந்த தேவி படத்தில் இவர் காமெடியனாக நடித்திருந்தார்.

இவரின் காமெடி இந்த படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தேவி படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் நடந்தது.

இதில் பேசிய பாலாஜி ‘கண்டிப்பாக இந்த படம் தான் பிரபுதேவா மாஸ்டருக்கு சரியான கம்பேக் படம் எனவும், எல்லோரும் அவரின் நடிப்பு குறித்து புகழ்ந்து வருகின்றனர் என கூறினார்.

அதைவிட இயக்குனர் விஜய்க்கு கண்டிப்பாக இந்த நேரத்தில் இப்படி ஒரு வெற்றி தேவைதான் எனவும் , ஏனெனில் சினிமா மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் சிரமத்தில் இருக்கும் விஜய்க்கு , இந்த வெற்றி அவருக்கு ஆறுதலை இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.