RRR movie 50th day Celebration: 'ஆர்ஆர்ஆர்' படம் ரிலீஸ் ஆகி 50வது நாளை எட்டியுள்ள நிலையில், படக்குழு வெற்றி விழா கொண்டாடிய  வீடியோவை வெளியிட்டுள்ளது. 

'ஆர்ஆர்ஆர்' படம் ரிலீஸ் ஆகி 50வது நாளை எட்டியுள்ள நிலையில், படக்குழு வெற்றி விழா கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளது. 

ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த மார்ச் 25 ம் தேதி பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்'. 

தெலுங்கின் இருபெரும் நட்சத்திரங்கள்:

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. படத்தின் கதை, பாடல்கள் என ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன. சுமார் ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் தூள் கிளப்பி 1, 200 கோடியை தொட்டு சாதனை படைத்து வருகிறது.

50வது நாள் கொண்டாட்டம்:

இந்த ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் 1 படம் என்ற சாதனையை படைத்தது. படத்தில் தெலுங்கின் இருபெரும் நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பிலும் பின்னி பெடலெடுத்துள்ளார். இருவருக்கும் தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், 50 நாட்களை கடந்தும் ஓடிக் கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை RRR படக்குழுவே வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...Nagma Latest pic: 47 வயதில் உடல் எடை கூடி சும்மா கும்முனு இருக்கும் நக்மா....போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Scroll to load tweet…