பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த இரண்டாவது சீசனில் நுழைந்த போட்டியாளர்களில் ஒரு புதுமை இருந்தது. அது தான் பாலாஜி மற்றும் நித்யா ஜோடி. கணவன் மனைவியான இவர்கள் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களை பிக் பாஸ்வீட்டினுள் அனுப்பிய போதே அனைவரும் எதிர்பார்த்தது ஒரு மிகப்பெரிய சண்டையை தான். ஆனால் இந்த இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு சண்டை போட்டு கொள்ளவில்லை. 

இதனாலேயோ என்னவோ நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விரைவிலேயே வெளியேறிவிட்டார்.  ஆனாலும் இந்த ஜோடி மீண்டும் சேர வேண்டும் என்பது பெரும்பாலான பிக் பாஸ் ரசிகர்களின் விருப்பமாகவே இருந்தது. இதனிடையே இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவர்களை வீட்டினுள் வந்து சந்திக்கின்றனர்.

பாலாஜிக்கும் நித்யாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடித்தத்தில் கூட நித்யா எப்போதும் பாலாஜிக்கு தான் தன் ஆதரவு என தெரிவித்தவர் கடைசியில் ஒரு நல்ல தோழியாக மட்டும் என கூறி அந்த கடிதத்தினை முடித்திருக்கிறார்.
 இதை படித்த பிறகு பாலாஜி மன வருத்தத்தில் அழுதிருக்கிறார். இந்த காட்சியை பார்த்த நித்யா, தன்னுடய டிவிட்டர் பக்கத்தில் பாலாஜியை குறித்தி பின் வருமாறு தெரிவித்திருக்கிறார்.

“இந்த 9 ஆண்டுகளில் அவர் கண்களில் இருந்து என் வார்த்தைகளுக்காக கண்ணீர் வருவதை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. மனம் வலிக்கிறது. இப்போதும் கூட நான் அவரை காதலிக்கிறேன். ஆனால் ஒரு நபராக தான். இன்னும் அவருடன் சேர்ந்து வாழும் அளவிற்கு என் மனம் மாறவில்லை. இந்த அன்பிற்கு நன்றி. ஆனால் ஏற்கனவே பட்ட காயங்கள் இன்னும் மனதில் ஆறவில்லை. எங்களுக்குள் இருக்கும் இந்த மனக்கசப்பு மாற இன்னும் ஆண்டுகள் ஆகலாம். நம் இருவருக்குள்ளும் அழகான மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்”
 என தன்னுடைய டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார் நித்யா. பாலாஜியை நேரில் பார்க்க இதுவரை அவர் உறவினர் யாரும் பிக் பாஸ் வீட்டினுள் வரவில்லை. ஒருவேளை அவரது மகள் மீண்டும் ஒரு முறை அவரை பார்க்க வரலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருக்கிறது.