பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று, அனைத்து போட்டியாளர்களையும் சற்று குஷியாக்கும் விதமாக பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க் கொடுக்கும் போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வருகிறார்கள். பல நாட்களாக தங்களுடைய குடும்பத்தினரை பார்க்காமல் இருக்கும் போட்டியாளர்கள் இந்த டாஸ்க் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வரும் போது இவர்கள் அசைய கூட முடியாமல் சிலை போல் நின்று தங்களுடைய சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் இருக்கும் அவர்களுடைய நிலையை பார்க்கவே மிகவும் பாவமாக உள்ளது.

ஏற்கனவே வெளியான ஒரு ப்ரோமோவில், நடிகை மும்தாஜின் அம்மா மற்றும் அண்ணன் ஆகியோர் வீட்டின் உள்ளே வந்து, மும்தாஜை சந்தித்து விட்டு சென்றனர். 

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பாலாஜியின் குடும்பத்தில் இருந்து எந்த நபர்களும் வராமல், ஒரு பரிசு மட்டுமே வருகிறது.

இதில், பாலாஜியின் மகள் போஷிகா... அன்புள்ள அப்பா நீங்கள் வென்றுவர வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்... இதை தொடர்ந்து அவருடைய மனைவி நித்தியாவும், பாலாஜிக்கு உங்களுக்கு ஒரு தோழியாக இருந்து சப்போர்ட் செய்வதாக கூறியுள்ளார். 

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பாலாஜி, இடிந்து போய் அழுகிறார். இவரை டேனி சமாதானம் செய்கிறார். ஆனால் பாலாஜி ஒரு வார்த்தையும் கூட பேசவில்லை. அவர் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வழிகிறது. இந்த ப்ரோமோ பார்க்கும் ரசிகர்கள் நெஞ்சையே உருக்கும் விதத்தில் உள்ளது. நெட்டிசன்கள் சிலர் நித்யா பழிவாங்குவதற்காக இப்படி செய்தாரா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு நித்யா தான் பதில் கூற வேண்டும்.