Asianet News TamilAsianet News Tamil

மரியாதை கொடுக்க தெரியல! கெத்தா இருந்த மும்தாஜை தேம்பி தேம்பி அழ வைத்த சிநேகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் 100 நாட்களை எட்ட உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள், முதல் சீசன் போட்டியாளர்கள் ஆர்த்தி, சிநேகன், காயத்திரி, சுஜா வருணி உள்ளிட்ட நடிகர்கள்  பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக சென்றுள்ளனர்.

mumtaj cry for snehan speech
Author
Chennai, First Published Sep 12, 2018, 12:03 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் 100 நாட்களை எட்ட உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள், முதல் சீசன் போட்டியாளர்கள் ஆர்த்தி, சிநேகன், காயத்திரி, சுஜா வருணி உள்ளிட்ட நடிகர்கள்  பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக சென்றுள்ளனர்.

mumtaj cry for snehan speech

இவர்கள் அங்கு ஒரு வார காலம் தங்க உள்ளனர். இவர்கள் வீட்டிற்குள் வந்த முதல் நாளே... எல்லாருமே சமம் தான் யாருக்கும் சிறப்பு சலுகை கிடையாது என கூறி, மும்தாஜுக்கு வைக்கப்பட்ட ஸ்பெஷல் பால், தயிர், போன்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். ஆனால் இவர்கள் இப்படி செய்ததை சுத்தமாக கண்டுகொள்ள வில்லை  மும்தாஜ். எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக இங்கிருந்து கொண்டு செல்லப்படும் உணவுகள் திரும்பவும் வரும் என அசால்ட் செய்தார்.

mumtaj cry for snehan speech

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... அனைத்து போட்டியாளர்களையும் அமர வைத்து நடுவில் நின்று சிநேகன் பேசுகிறார். அப்போது இங்கு வந்திருக்கும் அனைவரும், எது சொன்னாலும் செய்வேன் என்று கூறி தான் வந்திருக்கிறீர்கள். ஆனால் இங்கு நிறைய முரண்பாடுகள் உள்ளது. கமல் சார் உள்ளே வந்த போது கூட சிலர் அவருக்கு உரிய மரியாதை கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு பேசியது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என கூறினார். இதற்கு சுஜா வருணி நமக்கு என கூறினார்.

mumtaj cry for snehan speech

மேலும் உங்களுக்காக இங்கு உங்கள் அனைவரையும் கமல் திட்டுகிறாரே தவிர, இந்த திரை மூடியதும் உங்களுக்காக மக்களிடம் சப்போர்ட் செய்து பேசுகிறார் என சிநேகன் கூறியதும். கெத்தாக சுற்றி வந்த மும்தாஜ் கண்களில் தாரை தாரையாக கண்களில் இருந்து தண்ணீர் கொட்டியது. 

mumtaj cry for snehan speech

ஆனால் மும்தாஜ் பீல் பண்ணுவது போல், மற்ற போட்டியாளர்கள் யாரும் சிநேகன் பேசுவதற்கு பெரிதாக பீல் செய்வது போல் தெரியவில்லை. என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios