ஹாஸ்டலில் பிள்ளைகளை தங்க வைத்துவிட்டு செல்லும் பெற்றோர் நெடு நாட்களுக்கு பின் தங்கள் பிள்ளைகளை நேரில் காணவரும் போது தங்களையும் அறியாமல் இவருமே உணர்வசப்பட்டு கண்ணீர் சிந்துவர். ஹாஸ்டல் வாழ்க்கையை அனுபவித்த பலருக்கு இது நன்றாக தெரியும். 

பிக் பாஸ் நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட அப்படி தான், என்ன உள்ளே நடக்கும் விஷயங்களை வெளியில் இருந்து போட்டியாளர்களின் உறவினர்கள் பார்க்க முடியும். ஆனால் தங்கள் பிள்ளைகள் செய்யும் சரி தவறுகளை சுட்டி காட்ட தான் முடியாது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரின் உறவினரும் வந்து அவர்களை சந்தித்து செல்கின்றனர் இதில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் பிரமோவில் பிக் பாஸ் சர்வாதிகார் ஐஸ்வர்யாவின் அம்மா பிக் பாஸ் வீட்டினுள் ஒரு கரடி பொம்மையுடன் உள்ளே நுழையும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் மகளின் பெயர் ஏற்கனவே டேமேஜ் ஆகி இருப்பதால் மனவருத்தத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவின் அம்மா, அந்த தவறுகளை சரி செய்திட தன்னாலான முயற்சியை செய்திருக்கிறார்.


பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் தனது மகளை பாசத்துடன் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட அவர், தொடர்ந்து பாலாஜியிடம் சென்று தன் மகளை மன்னித்துவிடும் படி கைகூப்பி கண்கலங்கி இருக்கிறார். பிள்ளைகள் செய்யும் தவறுக்கு பெற்றோர் பொருப்பேற்று மன்னிப்பு கேட்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சியான தருணமாக இது அமைந்திருக்கிறது. ஐஸ்வர்யாவின் அம்மா அழுதபோது அவரை தேற்றிய பாலாஜியும் ஐஸ்வர்யாவை தன் மகள் போல தான் அவர் பார்ப்பதாக இந்த பிரமோவில் கூறி இருப்பது கூடுதல் நெகிழ்ச்சி.

இத்தனை நாட்களும் எலிமினேஷன் பக்கம் வராமல் ஐஸ்வர்யா தப்பித்து வந்ததற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம் என்று இந்த பிரமோவை பார்க்கும் போது நமக்கு தோன்றுகிறது. ஒரு வேளை இதனை பார்க்கு போது மக்கள் மனமும் கூட ஐஸ்வர்யாவை மன்னித்துவிடும் தானே.