உச்சநட்சத்திரமாக பிஸியாக வலம் வந்த சிம்ரனை சிணுங்கி சிணுங்கி அழ வைத்தது அவரது தங்கை மோனலின் மரணம். தற்கொலை எனச் சொல்லப்பட்டாலும் இந்த மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிம்ரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த "பார்வை ஒன்றே போதுமே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகி விஜயுடன் நடிக்கும் அளவுக்கு விறுவிறுவென வளர்ந்த மோனல் கடந்த 2002ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மோனல் நடிகர் குணாலை காதலித்து வந்ததாகவும் அவரால்தான் நடிகை மோனல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது நடிகை மோனல் குணாலை காதலிக்கவில்லை என்றும் அவர் நடன இயக்குனர் கலா மாஸ்டரின் தம்பியான பிரசன்னாவை காதலித்து வந்தார் என்றும் கூறப்பட்டது. இவர்களின் காதலுக்கு கலா மாஸ்டரின் வீட்டார் ஏற்றுக் கொள்ளாததால் பிரசன்னா, மோனலின் காதலை முறித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

காதல் தோல்வியால் மனமுடைந்த  மோனல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிம்ரன் ஏற்கனவே கூறி வந்தார்.  மோனல் தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை அறிந்ததும் கலா மாஸ்டரின் தூண்டுதலின் பேரில் மும்தாஜ் மோனலின் இல்லத்திற்கு சென்று தடயங்கள் சிலவற்றை அழித்து விட்டதாகவும் நடிகை சிம்ரன் போலீசாரிடம் கூறியிருந்தார்.

 

அதுமட்டுமில்லாமல் நடிகர் ரியாஸ் மற்றும் மும்தாஜ் ஆகியோர் இணைந்து கோடம்பாக்கத்தில் உள்ள மோனலின் இல்லத்திற்கு சென்று 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது டைரி ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்திருக்கிறார். பின்னர் செல்போன் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசிய போது மோனல் இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு நடிகர் ரியாஸ் இடம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மோனல் வீட்டில் இருந்து ஆதாரங்கள்  அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இதனை காவல்துறையினர் அளிக்க உள்ளதாக சிம்ரம் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மோனல் தற்கொலை வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துப்புதுலக்க தமிழக காவல்துறை தயாராகி வருகிறது.