சொன்னா நம்ப மாட்டீங்க.. 2 நிமிடத்தில் பிறப்பு சான்றிதழை டவுன்லோட் செய்யலாம்..!

உங்கள் குழந்தைகளுடைய பிறப்பு சான்றிதழை எப்போது வேண்டுமானாலும் ஒரு பைசா கூட செலவு இல்லாமல் எளிய வழியில் நீங்களே எளிதாக ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

You can download birth certificate in 2 minutes

உங்கள் குழந்தைகளுடைய பிறப்பு சான்றிதழை எப்போது வேண்டுமானாலும் ஒரு பைசா கூட செலவு இல்லாமல் எளிய வழியில் நீங்களே எளிதாக ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தில், பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்கள் பெறுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த, 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், இணையதளத்தில் அப்லோடு செய்து பொதுமக்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், பிறப்பு சான்றிதழ் எவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படுவது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Birth Certificate பதிவிறக்கம் செய்வதில் இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளன. அதன்படி சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணைப்பின் வழியாகவும், மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் https://www.etownpanchayat.com/PublicServices/Birth/BirthSearch.aspx என்ற இணையதள பக்கத்தின் வழியாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதையும் படிங்க;- MS Office தெரிந்தால் போதும்.. உங்களுக்கு காத்திருக்கிறது தமிழக அரசு வேலை..!

சென்னை தவிர மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் பிறப்பு சான்றிதழை எவ்வாறு பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்வது என்பதைப் பார்க்கலாம். பேரூராட்சிகள் இயக்ககத்தின் (Directorate of Town Panchayats) https://www.etownpanchayat.com/PublicServices/Birth/BirthSearch.aspx என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து, திரையில் தோன்றும் பக்கத்தில் BIRTH CERTIFICATE SEARCH என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின்னர், பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி, முதலிய விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்து, சான்றிதழ் தமிழில் வேண்டுமென்றால் சான்றிதழ் வகை என்பதில் தமிழை கிளிக் செய்ய வேண்டும். அதுவே, சான்றிதழ் ஆங்கிலத்தில் வேண்டுமென்றால் சான்றிதழ் வகை என்பதில் ஆங்கிலத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, அனைத்து விபரங்களையும் சரியாகப் பதிவு செய்த பின்னர் GENERATE என்பதை கிளிக் செய்தால் பிறப்பு சான்றிதழ் விபரங்கள் திரையில் தோன்றும். அடுத்ததாக PRINT என்பதை கிளிக் செய்து பிறப்பு சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இதையும் படிங்க;-  கவனத்திற்கு!! சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. நாளை தான் கடைசி தேதி..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios