கவனத்திற்கு!! சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. நாளை தான் கடைசி தேதி..
தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், காலியாக உள்ள துப்புரவு பணியாளர் இடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு வயது வரம்பை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயது உடையவராக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் பகுதி நேர துப்புரவு பணியாளர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண் விண்ணப்பதார்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. கதறி அழுத தேர்வர்கள்.. சீர்காழியில் நடந்தது என்ன..?
காலியாக உள்ள 2 இடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மாதம் தொகுப்பூதியமாக ரூ.3000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வரும் 25 ஆம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளைக்குள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ளதால் அதற்க்குள் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:TNPSC Group 4 : மைனஸ் மார்க் இருக்கு.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதோ !