GATE 2026 தேர்விற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 28 முதல் தொடங்கியுள்ளன. IIT குவஹாத்தி நடத்தும் இந்தத் தேர்வில் புதிய பாடங்கள் மற்றும் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேட் 2026 (GATE - Graduate Aptitude Test in Engineering) தேர்விற்கான அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இந்த முறை தேர்வை IIT குவஹாத்தி நடத்துகிறது. புதிய அறிவிப்பில் பல முக்கிய மாற்றங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

எப்படி விண்ணப்பிப்பது?

  • அதிகாரப்பூர்வ இணையதளம் gate2026.iitg.ac.in க்கு செல்லவும்.
  • “விண்ணப்ப போர்ட்டல்” லிங்கை கிளிக் செய்யவும்.
  • உங்கள் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை (சான்றிதழ்கள், அடையாளச் சான்று, புகைப்படம், கையொப்பம்) பதிவேற்றவும்.
  • கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை PDF / Print வடிவில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் தொடக்கம்: 28 ஆகஸ்ட் 2025

இறுதி தேதி (லேட் கட்டணம் இல்லாமல்): 26 செப்டம்பர் 2025

இறுதி தேதி: 9 அக்டோபர் 2025

தேர்வு தேதிகள்: 7, 8, 14, 15 பிப்ரவரி 2026

முடிவு அறிவிப்பு: 19 மார்ச் 2026

யார் விண்ணப்பிக்கலாம்?

  • B.E., B.Tech., B.Arch., B.Sc., B.Com., Arts, Humanities போன்ற துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றவர்கள்.
  • இளங்கலை பட்டப்படிப்பு 3ம் ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பம் GOAPS Portal மூலமே ஆன்லைனில் செய்ய வேண்டும்.

புதிய மாற்றங்கள்

இந்த முறை எரிசக்தி அறிவியல் (XE-I) பாடம் “Engineering Sciences (XE)” பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தமாக இப்போது 30 பாடல்கள் GATE 2026ல் கிடைக்கிறது.

முந்தைய வருடங்களில் சேர்க்கப்பட்ட பாடங்கள்:

  • பயோமெடிக்கல் இன்ஜினியரிங் (பிஎம்)
  • சுற்றுச்சூழல் அறிவியல் & பொறியியல் (ES)
  • மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் (XH)
  • புவியியல் பொறியியல் (GE)
  • தரவு அறிவியல் & AI (DA)
  • கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல் பொறியியல் (NM) அடங்கும்.

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/PwD/பெண்கள்: ரூ.1,000 (தாமத கட்டணம் - ரூ.1,500)
  • மற்றவர்கள்: ரூ.2,000 (தாமத கட்டணம் உடன் – ரூ.2,500)

GATE மதிப்பெண்

  • M.Tech / Ph.D. படிப்புகளுக்கான சேர்க்கை வாய்ப்பு.
  • அரசு நிதியுதவி பெறும் ஆராய்ச்சி நிறுவனங்களில் உயர் படிப்புகள்.
  • பல PSU (Public Sector Units) நிறுவனங்களில் வேலைக்கு GATE மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.