NEET UG 2023 result : நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்..!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அதன்படி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. 

When is NEET result? Important information released..!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அதன்படி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. 

இதையும் படிங்க;- 11th Exam : தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து.? பள்ளிக்கல்வித்துறை என்ன சொல்கிறது? முழு விபரம்

When is NEET result? Important information released..!

இந்நிலையில், நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி  நடைபெற்றது. சரியாக 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகள் நடைபெறாத வகையில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. 

When is NEET result? Important information released..!

இந்நிலையில், நாடு முழுவதும் பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் எப்போது முடிவுகள் வெளியாகும் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. படித்து முடித்தால் உடனே பட்டம் - யுஜிசி பரிந்துரை!

When is NEET result? Important information released..!

உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால், தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தலாம். இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். பாட வல்லுநர்களை கொண்டு குறைகள் சரிபார்க்கப்படும். குறை கண்டறியப்பட்டால், தொடர்புடைய விடைகள் மாற்றம் செய்யப்படும். நீட் தேர்வு முடிவுகளை  https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios