மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் UPSC வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி.. விவரங்கள் இதோ !!
UPSC என்னும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: UPSC
காலி பணியிடங்கள்: 20
பணியின் பெயர்: Anthropologist, Scientist-B and others
பணியின் விவரம்: மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்கும் தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் நாளைக்குள் (15.09.2022) விண்ணப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்ய வேண்டும். அதனை பூர்த்தி செய்து ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
SC / ST / PwBD / பெண்கள் தவிர மற்றவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரங்கள் இதோ..
வயது வரம்பு:
அறிவிக்கப்பட்டுள்ள பணிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதனது 30,35,38 மற்றும் 50 என நிர்ணயிக்கபட்டுள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Graduate, Diploma, Post Graduate, Master Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறைகளில் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
பணிக்கு தகுந்தாற்போல் பணியின் போது Pay Matrix Level – 07, 10, 12 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:இரண்டாம் கட்ட யூஜிசி - நெட் ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோட் செய்வது எப்படி ?