UGC : இனி முதுகலை படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு கட்டாயம்.. யுஜிசி தலைவர் அறிவிப்பு !
அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கைக்கு CUET முதுகலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் சேருவதற்கு அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் CUET-PG முறையைப் பின்பற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பாக வடக்கு-கிழக்கு, கிராமப்புற மற்றும் பிற தொலைதூர இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு, பல்கலைக்கழகங்களுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு CUET ஒரு சீரான தளத்தையும் சமமான சாத்தியக்கூறுகளையும் வழங்குகிறது என்று கூறியுள்ளார்.
இதுபற்றி கூறிய அவர்,CUET நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பொதுவான தளத்தையும் சம வாய்ப்புகளையும் வழங்குகிறது. குறிப்பாக வடக்கு - கிழக்கு, கிராமப்புற மற்றும் பிற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்க உதவுகிறது. பல்கலைக்கழகங்களில் சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்று கூறினார்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் கட்டாயம் க்யூட் முதுகலைத் தேர்வைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருப்பது முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகிறது.