UGC NET 2022 தேர்வு முடிவுகள் நேற்று இரவு ( 5.11.2022) அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களது முடிவுகளை www.nta.ac.in மூலம் தெரிந்துக் கொள்ளலாம். 

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நெட் தேர்வு இந்தாண்டு நான்கு கட்டங்களாக நடந்தது. 
கொரோனா தொற்று காரணமாக நடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள், இணைத்து ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஜூலை - அக்டோபர் வரை நான்கு கட்டங்களாக நெட் தேர்வு 2022 நடைபெற்றது. பின்னர் நவ. 2 ஆம் தேதி இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் www.nta.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் நாளை (05.11.2022) வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க:UGC - NET 2022 Result: தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. தெரிந்துக்கொள்ளுவது எப்படி..? விவரங்கள் உள்ளே

அதன்படி UGC NET 2022 தேர்வு முடிவுகள் நேற்று இரவு ( 5.11.2022) அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களது முடிவுகளை www.nta.ac.in மூலம் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றவும் Junior Research Fellowship-JRF எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவிதொகை பெறவும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க:அக்- 13ல் நடைபெறும் யுஜிசி, நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. இன்று முதல் பதவிறக்கம் செய்யலாம்.