அக்.17ம் தேதி நடக்க இருந்த ‘நெட்’ தேர்வு திடீர் தள்ளி வைப்பு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அக்டோபர் 17ம் தேதி நடக்க இருக்க யுஜிசி நெட் தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அக்டோபர் 17ம் தேதி நடக்க இருக்க யுஜிசி நெட் தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கல்லூரி உதவி பேராசியராக பணியாற்ற வேண்டும் என்றால் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஆண்டுக்கு 2 முறை இந்த தேர்வை தேசிய தேர்வு முகமையானது நடத்தி வருகிறது.
நடப்பாண்டில் வரும் 17ம் தேதி முதல் 25ம் ஆண்டு வரை நெட்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வை எழுத விரும்புவோருக்கான இணையதள விண்ணப்பதிவு கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கியது.
இந் நிலையில் அக்டோபர் 17ம் தேதி நடக்க இருக்க யுஜிசி நெட் தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நெட் தேர்வு நடக்கும் அதே நாளில் வேறு சில போட்டி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறி உள்ளது.
தேர்வாளர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், மாற்று தேதி குறித்து பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.