Asianet News TamilAsianet News Tamil

TSPSC அறிவித்த புதிய வேலைவாய்ப்பு 2022.. தேர்வு எப்போது? எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம்..

தெலுங்கானா மாநிலத்தில் அரசின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

TSPSC Recruitment 2022 for AE, JTO and other posts.. direct link here to apply
Author
First Published Sep 29, 2022, 12:19 PM IST

தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் tspsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அக்டோபர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  தற்போது உதவி பொறியாளர், நகராட்சி உதவி பொறியாளர்,  தொழில்நுட்ப அதிகாரி, ஜூனியர் தொழில்நுட்ப அதிகாரி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 833 பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் objective type தேர்வு ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் நடமுறையில் நடந்தபடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க:கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை.. கேரள உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

தேர்வு தேதி குறித்தான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று TSPSC தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நடப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு அனுமதி சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளின் அடிப்படையில் கல்வி தகுதி மாறுப்படுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் கூடுதல் தகவல்களை தெரிந்துக் கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்துக் கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் 18 - 44 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளின் படி, வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:3 முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்… 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!!

எப்படி விண்ணப்பது..? 

1, முதல் tspsc.gov.in எனும் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2, ”New Registration (OTR)” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3, பின்னர் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதனை கிளிக் செய்யவும்.

4, இப்பொழுது விண்ணப்பதாரர்கள் Login செய்ய வேண்டும் 

5, விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். 

6, தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

7, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

8, இறுதியாக விண்ணப்பத்தினை எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios