மாணவர்களே அலர்ட்.. ! பி.இ , கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. விண்ணப்பித்துவிட்டீர்களா?

தமிழகத்தில்‌ உள்ள பொறியியல்‌, கலை- அறிவியல்‌ கல்லூரிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
 

Today is the last day to apply for Engineering and Arts colleges

தமிழகத்தில்‌ அரசு கலை, அறிவியல்‌ கல்லூரிகளில்‌ இளநிலைப்‌ பட்டப்‌ படிப்புகளில்‌ முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 163 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சம்‌ இடங்களுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான மாணவர்‌ சேர்க்கை இணையவழியில்‌ நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 2.94 லட்சம்‌ பேர்‌ வரை விண்ணப்பக்‌ கட்டணம்‌ செலுத்தியுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி.. இரண்டு நாட்கள் பலூன்கள் பறக்க விட தடை..

இதேபோன்று, அண்ணா பல்கலைக்‌ கழகத்தின்கீழ்‌ இயங்கும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில்‌ இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன்‌ 20-இல்‌ தொடங்கியது. இதுவரை மொத்தம்‌ விண்ணப்பித்துள்ள 2,07,361 பேர்களில் 1.63 லட்சம்‌ பேர்‌ விண்ணப்பக்‌ கட்டணம்‌ செலுத்தியுள்ளனர்‌. மேலும் அதில் 1.49 லட்சம்‌ பேர்‌ அசல்‌ சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்‌.

மேலும் படிக்க:சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிட்டால் கைது.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.!

இதற்கிடையே சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் கடந்த 22 ஆம் தேதி வெளியான நிலையில், மாணவர்கள் விண்ணப்பப்பிதற்கு ஏதுவகா கூடுதலாக 5 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, பொறியியல்‌, கலை, அறிவியல்‌ சேர்க்கை விண்ணப்பப்‌ பதிவுக்கான கால அவகாசம்‌ இன்றுடன் முடிவடைகிறது.  பொறியியல்‌ படிப்புக்கு மட்டும்‌ விண்ணப்பக்‌ கட்டணம்‌, சான்றிதழ்கள்‌ பதிவேற்றம்‌ செய்ய ஜூலை 29 வரை அவகாசம்‌ தரப்பட்டுள்ளது. மேலும்‌ தேசிய கட்டிடக்கலை திறன் தேர்வு  (NATA) தேர்வு முடிவுகள்‌ வெளியாகும்‌ வரை பி.ஆர்க்‌. படிப்புகளில்‌ சேர தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்‌ என்று உயர்கல்வித்‌ துறை தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios