தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள 621 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர்கள், (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம் :

காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா)

காவல் சார்பு ஆய்வாளர்கள் ( ஆயுதப்படை)

காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தமிழ்நாடு சிறப்பு காவல்படை )

ஆண்கள் : 469

பெண்கள் : 152

மொத்த காலியிடங்கள் – 621

தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் டிகிரி படித்திருக்க வேண்டும். மொத்த பணியிடங்களில் 20% தமிழ் மொழிக்கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

12வது படித்தால் போதும்.. சுகாதாரத் துறையில் வேலை.! உடனே விண்ணப்பிங்க

வயது

20 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30. வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

தேர்வு முறை :

எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, எந்த வித குற்ற வழக்கும் இல்லாதவர் என்ற நற்சான்று, விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும், சரியான தேதி, தேர்வு மையம் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கட்டணம் :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்ப கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மூலம் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்
  • முகப்பு பக்கத்தில் Notification என்பதை கிளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும்
  • அதில் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
  • Online Application என்பதை கிளிக் செய்து, சுய விவரங்களை நிரப்பி பதிவு செய்ய வேண்டும்.
  • அதன்பின்னர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • பின்னர் எதிர்கால குறிப்புக்காக ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

நேர்காணல் மட்டும் தான்..அழகப்பா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை - முழு விபரம்