ரூ.75,000 சம்பளம்.. 1768 இடைநிலை ஆசிரியர்கள் காலியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

TN TRB Recruitment 2024: Last date to apply for 1768 Secondary Grade Teacher posts  Rya

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மாதம் 14-ம் தேதி இதற்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. இந்த நிலையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (20.03.2024) கடைசி நாளாகும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.75,900 வரை சம்பளம் கிடைக்கும். 

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழை (TNTET - தாள்-I) வைத்திருக்க வேண்டும். 12-ம் வகுப்பு முடித்து, D.ED அல்லது B.ED படித்திருக்க வேண்டும்.

மொத்தம் 9,144 காலியிடங்கள்.. ரூ.63,000 வரை சம்பளம்.. இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு..

வயது வரம்பு :

53 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம்: SC, SCA, ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் தவிர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.300 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெறும்.

தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு! எப்போது விண்ணப்பிக்கலாம்?

எப்படி விண்ணப்பிப்பது

ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் இன்று மாலை 5 மணிக்குள் https://trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வெண்டும். இந்த பணிக்கான தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios