டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ் !

நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துத்துறை கழகம் அறிவித்துள்ளது.

TN Transport Corporation has announced special buses will be run for TNPSC Group 4 exams students

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. பகுதி 1ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். 

பகுதி 2ல் பொது அறிவு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தமுள்ள 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வு 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்களில் நடைபெறுகிறது. மொத்தம் 7,689 மையங்கள் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவிக்கு 22 லட்சம் பேர் வரை எழுதுவது இந்த தேர்வில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Transport Corporation has announced special buses will be run for TNPSC Group 4 exams students

மேலும் செய்திகளுக்கு..10ம் வகுப்பு படித்தால் போதும்..ரயில்வே துறையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு இதோ !

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழகம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின்படி தேர்வு மைய எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

TN Transport Corporation has announced special buses will be run for TNPSC Group 4 exams students

தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஆனது தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios