Asianet News TamilAsianet News Tamil

TN SSLC Supplementary Retotal Result:10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

பொதுத்தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன் 27ம் தேதி முதல் நடைபெற்றது.

TN SSLC Supplementary Retotal Result 2023  date announcement
Author
First Published Aug 17, 2023, 12:04 PM IST

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம்  10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். அதில், மாணவர்கள் 4,55,017, மாணவிகள் 4,59,303 பேர் தேர்வு எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 19ம் தேதி வெளியானது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66 சதவீதமாகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16 சதவீதமாகவும் இருந்தது. 

இதையும் படிங்க;- அறநிலையத்துறையில் உடனடி வேலை.. 8ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர் வரை அப்ளை செய்யலாம் - முழு விவரம்!

இந்நிலையில், பொதுத்தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன் 27ம் தேதி முதல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஜூலை 26ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவர் ஆகஸ்ட்1, 2ம் ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதையும் படிங்க;- சென்னையில் அஞ்சல் துறை வேலைவாய்ப்பு... 2,994 பணியிடங்கள்... தகுதித் தேர்வும் கிடையாது!

தற்போது இந்த 10ம் வகுப்பு துணைத்தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் ஆகஸ்ட் 18ம் தேதியான நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios