அறநிலையத்துறையில் உடனடி வேலை.. 8ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர் வரை அப்ளை செய்யலாம் - முழு விவரம்!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைதுறையில் தற்பொழுது வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. நாமக்கல்லில் அமைந்துள்ள அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் கீழ் காணும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகிறது.

Hindu Aranilaithurai Vacancy in Namakkal Arulmigu Narasimmaswamy Temple

இதுகுறித்து வெளியாகி உள்ள அரசு அறிக்கையின்படி 2023-24 ஆம் ஆண்டின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு எண் 182ன் படி திருக்கோவில்களில் ஆகம விதிகளின்படி வழிபாட்டு முறைகளை செய்திட தகுதி வாய்ந்த அர்ச்சகர்களை உருவாக்கும் பொருட்டு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசாணை என் 271 என் 19.7.2023ன் படி திருக்கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்குவதற்கு ஏதுவாக பூர்வாக பணிகள் நடைபெற்று வருகிறது என்றும். 

இப்பயிற்சி பள்ளியில் கீழ்கண்ட பணியிடங்களில் நியமனம் பெற விரும்புபவர்கள் உரிய படிவத்தில் உரிய விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களில் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளது.

IBPS Clerk 2023 : ஐபிபிஎஸ் கிளார்க் ப்ரிலிம்ஸ் ஹால் டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

பணி விவரம் மற்றும் சம்பளம் 

தமிழ் ஆசிரியர் - சம்பளம் 20,600 முதல் 65,500 ரூபாய் வரை

தமிழில் முதுகலை பட்டம் முடித்து உரிய பணியில் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்கவேண்டும். (கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள இணையத்தை பார்க்கவும்)

ஆகம ஆசிரியர் - சம்பளம் 20,600 முதல் 65,500 ரூபாய் வரை

வேத ஆகம பாடசாலையில் ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் (கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள இணையத்தை பார்க்கவும்) 

விடுதி காப்பாளர் - சம்பளம் 20,600 முதல் 65,500 ரூபாய் வரை 

இளங்கலை ஆட்டம் அல்லது அதற்கு இணையான அரசு அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்கவேண்டும்.

அலுவலக உதவியாளர் (பள்ளி) - சம்பளம் 11,600 முதல் 36,800 வரை

8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசு அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்கவேண்டும். 

அலுவலக உதவியாளர் (விடுதி) - சம்பளம் 11,600 முதல் 36,800 வரை

8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசு அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்கவேண்டும். 

சமையலர் - சம்பளம் 11,600 முதல் 36,800 வரை 

தமிழி எழுத படிக்க தெரியவேண்டும், உணவு தயாரிக்க தெரியவேண்டும்.

தூய்மை பணியாளர் - சம்பளம் 11,600 முதல் 36,800 வரை

தமிழில் எழுத படிக்க தெரியவேண்டும்.

கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பபடிவங்களை பெற namakkalanjaneyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்

தமிழ்நாடு போலீஸில் வேலை: ஆக.18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios