Asianet News TamilAsianet News Tamil

12ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் அறிவிப்பு.. இவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை? முழு விபரம் உள்ளே

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tn education department released 12th public examination exam fees
Author
First Published Jan 7, 2023, 5:57 PM IST

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த தகவலை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணை நவம்பர் மாதம்  வெளியானது. அதன்படி மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Tn education department released 12th public examination exam fees

இதையும் படிங்க..அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 11 ம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய். இதர கட்டணம் 35 ரூபாயும் செலுத்த வேண்டும். 06.01.2023 மதியம் முதல் 20.01.2023 மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று https://www.dge1.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

Follow Us:
Download App:
  • android
  • ios