Asianet News TamilAsianet News Tamil

8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... ரூ. 58,000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு பொருளியல் மற்ரும் புள்ளியியல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tamilnadu govt Economics and statistics dept recruitment for office assistant jobs Rya
Author
First Published Nov 23, 2023, 3:52 PM IST | Last Updated Nov 23, 2023, 3:52 PM IST

தமிழ்நாடு பொருளியல் மற்ரும் புள்ளியியல் துறை காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு விவரம் :

மொத்த காலியிடங்கள் : 9

நிறுவனம் : தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை

வேலை வகை : தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம் : சென்னை

நிரந்த்ர முழுக்காவலர் : 1

தூய்மை பணியாளர் : 2

அலுவலக உதவியாளர் : 6

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கல்வித்தகுதி 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கண்டிப்பாக தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள்ம் : ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை

வயது வரம்பு : 01.07.2023-ன் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதாக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது :

https://des.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அண்மையில் எடுத்த பாஸ்ட்போர்ட் சைஸ் கலர் போட்டோவுடன் விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிட்டு, ஆகார், கல்வி சான்று, இருப்பிட சான்று, வயது, சாதிச்சான்று ஆகியவற்றின் நகலை விண்ணப்பத்துடன் இனைத்து அனுப்ப வேண்டும்.

 

ரூ.40,000 வரை சம்பளம்..10, 12, ஐடிஐ படித்தால் போதும்..நாமக்கல் சுகாதாரத்துறையில் வேலை..!

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : பொருள் இயல், புள்ளி இயல் துறை, டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006.

முழுமையான விவரங்கள், உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கபப்டும். பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் ஆகிய விவரங்கள் தபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios