TN Class 10th Results 2023: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! அசத்திய மாணவிகள்! மாணவர்கள் நிலை என்ன?

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9,96, 089 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழ்நாட்டை சேர்ந்த 12,352 பள்ளிகளில் படித்த 4,66,765 மாணவர்கள், 4,55,960 மாணவியர் தேர்வு எழுதினர். 

Tamil Nadu 10th Exam Result 2023 declared today how to check it and download

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9,96, 089 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழ்நாட்டை சேர்ந்த 12,352 பள்ளிகளில் படித்த 4,66,765 மாணவர்கள், 4,55,960 மாணவியர் தேர்வு எழுதினர். இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்படப்பட்டது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.66%, மாணவர்கள் 88.16% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதையும் படிங்க;- காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 2023: விண்ணப்பத்தார் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...!!

Tamil Nadu 10th Exam Result 2023 declared today how to check it and download

மாணவர்களை விட மாணவியர்கள் 6.5% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் 6.5% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதம் - 3,649 பேரும், அறிவியல் 3 584, சமூக அறிவியலில் 320 பேர்  100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 92.24 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Tamil Nadu 10th Exam Result 2023 declared today how to check it and download

இதையும் படிங்க;-  SBI Mutual Fund நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ..

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடம் *2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்தது. 

Tamil Nadu 10th Exam Result 2023 declared today how to check it and download

தேர்வு முடிவுகளை https.www.tnresults.nic.in, https/www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் உடனடியாக அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu 10th Exam Result 2023 declared today how to check it and download

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios