Asianet News TamilAsianet News Tamil

படித்த முடித்தவுடன் ஸ்டார் ஹோட்டலில் வேலை.. 100% வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு.. தாட்கோ கழகம் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகமானது, Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில், B.Sc பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்  படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. 
 

tahdco invites to apply for hotel management courses in institute of hotel management catering technology in tharamani
Author
First Published Sep 9, 2022, 3:50 PM IST

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகமானது, Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில், B.Sc பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்  படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நாட்டின் உயர்தர இடங்களில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு செய்யப்படும் என்றும், படிப்புக்கான கட்டண தொகையை கல்விக் கடனாக வழங்கப்படும் என்றும் என்றும் தாட்கோ கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,” சென்னை தரமணியிலுள்ள Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ISO தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

மேலும் படிக்க: ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியானது.. தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?

American Council Of Business -ல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. France நாட்டில் உள்ள  Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2021-ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் (Hospitality & Hotel Administration) உலக தர வரிசையில் மொத்தம் 100 நிறுவனங்களில் 14 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு B.Sc. (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப் படிப்பும், மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் படிப்பும், கைவினைஞர் (Craftmanship Course in Food Production & Patisserio) பற்றிய படிப்பும் படிக்கலாம்.

மேலும் படிக்க:பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. இப்படிப்புக்கான கட்டண தொகையை தாட்கோ கல்விகடனாக வழங்கும்.

இதற்கான, தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ /மாணவிகள் 12, மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ25,000/- முதல் ரூ.35,000/-வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/ வரை ஊதியமாக பெறலாம். இப்படிப்பில் விண்ணப்பம் செய்ய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் வரும் 14.09.2022 க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. முழு விவரம்..

Follow Us:
Download App:
  • android
  • ios