Asianet News TamilAsianet News Tamil

SSCயின் புதிய அறிவிப்பு.. மத்திய துணை ராணுவ படையில் 24,369 காலி பணியிடங்கள்.. விவரம் உள்ளே

மத்திய துணை ராணுவ படையில் காலியாக உள்ள காவலர்கள் பணயிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 
 

SSC Recruitment Notification 2022 for 24,369 constable posts
Author
First Published Nov 7, 2022, 11:11 AM IST

நிறுவனம்: Central Reserve Police Force

காலி பணியிடங்கள்:24,369

பணியின் பெயர்: constable 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களுக்கு வயது 18 - 23க்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசி பயிற்சி இருந்தால் கூடுதல் சிறப்பு. 

உடற்தகுதி: 

குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

ஆண்கள்: உயரம் - குறைந்த பட்சம் 170 செ.மீ, மார்பளவு - 80 செ.மீ, 

பெண்கள்: உயரம் - குறைந்தபட்சம் 157 செ.மீ . 

1.6 கிமீ தூரத்தை 8.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக நிலை 3 யின் படி ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்த தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை , புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க:12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios