செபியில் காலியாக உள்ள 24 பணியிடங்கள்.. பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. உடனே முந்துங்கள்..
அந்நிய செலாவணி ஒழுங்கு முறை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தகுதியானவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செபியில் மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் உதவி மேலாளர் (Assistant Manager ) எனும் பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதந்தோறு சம்பளமாக ரூ.44,500 முதல் ரூ.89,350 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் வயது 30க்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு ஏதாவதொரு பிரிவில் பி.இ பொறியியல் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடத்தப்படும். மேலும் இரண்டு கட்டங்களாக எழுத்து தேர்வானது நடத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் 27 ஆம் தேதி முதல் கட்டத் தேர்வும் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் சென்னை , கோவை , மதுரை ஆகிய நகரங்களில் முதல் கட்ட தேர்வும் சென்னயில் இரண்டாம் கட்ட தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர் பணிக்கும் விண்ணப்பம் செய்பவர்கள், கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:தரவரிசைப்பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்.. முதல் 5 இடத்தை பிடித்த கல்லூரிகள் எவையெவை..?