Asianet News TamilAsianet News Tamil

SBI Card நிறுவனத்தில் உடனடி வேலை.. ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்!

SBI கார்டு நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர்கள், ஏரியா சேல்ஸ், POS மற்றும் CBSF பணிகளில் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

SBI Card announces various vacancy including assistant manager post apply online
Author
First Published Jul 11, 2023, 7:50 PM IST

SBI கார்டு நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் SBI கார்டு நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

எப்படி விண்ணப்பிப்பது?

வெளியான தகவலின்படி SBI கார்டு நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர்கள், ஏரியா சேல்ஸ், POS மற்றும் CBSF பணிகளில் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. SBI கார்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ (www.sbicard.com) இணையதளத்தின் Career பக்கத்தில் உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் இந்த வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். 

சம்பளம் & கல்வித்தகுதி 

பணிகளை பொறுத்து சுமார் 90,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டப் படிப்பை முடித்த (MBA முடித்தவர்களுக்கு முன்னுரிமை ) அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

முன் அனுபவம் 

மேலும் துறை சார்ந்த ரீதியாக மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை மாதம் 31ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார ஆய்வாளர்கள் பணி.. 1066 காலி பணியிடங்கள் - யாரெல்லாம் அப்ளை செய்யமுடியும்? முழு விவரம்!

Follow Us:
Download App:
  • android
  • ios