சுகாதார ஆய்வாளர்கள் பணி.. 1066 காலி பணியிடங்கள் - யாரெல்லாம் அப்ளை செய்யமுடியும்? முழு விவரம்!
தமிழகத்தின் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம், தமிழ்நாடு பொது சுகாதார துணை சேவைகளில் சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 (Health Inspector Grade 2) பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான (Temporary) ஆன்லைன் விண்ணப்பத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்ற அதிகாரபுத்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழகத்தின் MRB எனப்படும் Medical Services Recruitment Board.
வேலைவாய்ப்பு குறித்து அறிவித்துள்ள நிறுவனத்தின் பெயர் : MRB தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்
பதவியின் பெயர் : சுகாதார ஆய்வாளர்கள் கிரேட் 2 (Health Inspector Grade 2)
வகை : மாநில அரசு வேலை (தற்காலிகம்)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1066 (ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)
வேலை இடம் : தமிழ்நாடு
அறிவிப்பு தேதி : 11 ஜூலை 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31 ஜூலை 2023
அதிகாரப்பூர்வ இணையதளம் : mrb.tn.gov.in
கல்வித்தகுதி
இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் 12ம் வகுப்பில் Biology பிரிவில் அல்லது Botany அல்லது Zoology பிரிவில் பயின்றவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்தவர்களாக இருக்க வேண்டும். மற்றும் மல்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் / ஹெல்த் இன்ஸ்பெக்டர் / சானிட்டரி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏதோ ஒரு பாடத்தை பயின்று, டைரக்டர் ஆப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரிவென்டிவ் மெடிசின் ஆணையத்திடம் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் SC, ST, SCA, MBC / DNC உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் உட்சபட்ச வயது வரம்பு இல்லை. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அப்ளை செய்யலாம். அதே போல் OC வகுப்பை சேர்ந்தவர்களில் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OC பிரிவில் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள் 42 வயது வரையும், Ex-Service manகள் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
MRB வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாத சம்பளம் 19,500 முதல் 62,000 ரூபாய் வரை வழங்கப்படும். கூடுதல் தகவலுக்கு MRBயின் அதிகாரப்பூர்வ இணையத்தை பார்க்கவும்.
183 பணியிடங்கள்.. கூடங்குளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - மிஸ் பண்ணிடாதீங்க.!!