வெளியானது எஸ்.பி.ஐ வங்கி பணிக்கான முதல்நிலை தேர்வு தேதி... ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

பாரத ஸ்டேட் வங்கியில் முதல்நிலை தேர்வுக்கான தேதி வெளியாகியுள்ளதோடு ஹால்டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. 

sbi bank jobs primary exam date released and here the details about downloading hallticket

பாரத ஸ்டேட் வங்கியில் முதல்நிலை தேர்வுக்கான தேதி வெளியாகியுள்ளதோடு ஹால்டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது, ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

ஹால்டிக்கெட் ட்வுன்லோடு செய்வது எப்படி?

  • https://sbi.co.in/ அல்லது https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் அட்மிட் கார்ட டவுன்லோடு செய்யலாம். 
  • எஸ்.பி.ஐ.  ப்ரொபேஷனரி அதிகாரி வேலைவாய்ப்புக்கான முதல் நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு லிங்க்- https://ibpsonline.ibps.in/sbiposep22/cloea_dec22/downloadstart.php
  • இந்த லிங்க் மூலம் Call Letterக்கு தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
  • அதில் கேட்கப்படும் பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய அட்மிட் கார்டு ஸ்கிரில் காட்டும்.
  • அட்மிட் கார்டை பிரிட்ண்ட் அவுட் மற்றும் PDF ஆக சேவ் செய்து கொள்ளவும்.

முதல்நிலை தேர்வு தேதி:

ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான முதல் நிலை தேர்வு வரும் 17, 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 
கலை 9 மணி முதல் 10 மணி வரை,  நண்பகல் 11.30 முதல் 12.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை  4.30 மணி முதல்  5.30 மணி வரை என்ற ஷிப்டுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

பணி விவரம்:

  •  ப்ரொபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers) - 1,673

கல்வித் தகுதி:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு குறைவாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் கூடாது.

தேர்வு செய்யும் முறை: 

  • இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்படு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.

ஆன்லைன் பதிவு செய்தல்: 

  • 22.09.2022 முதல் 12.10.2022 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்

தேர்வுக்கான பயிற்சி: 

  • நவம்பர்/டிசம்பர் 2022

டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

 முதன்மை எழுத்துத் தேர்வு:

  • 2023 ஜனவரி/பிப்ரவரி

திறனறிவுத் தேர்வு: 

  • 2023 பிப்ரவரி/மார்ச்

நேர்முகத் தேர்வு: 

  • 2023 பிப்ரவரி/மார்ச்

இறுதி பட்டியல்: 

  • 2023 மார்ச்

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ஊதிய விவரம்:

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது.

எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios