சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் இருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த பணிக்கு தகுதியான நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் : பாதுகாப்பு அதிகாரி

மொத்த காலியிடங்கள் : பல்வேறு பதவிகள்

சம்பளம் மாதம் : ரூ.30,000 - ரூ.30,000

வேலை இடம் : சேலம்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.10.2022

இதையும் படிங்க..போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி - எவ்வாறு விண்ணப்பிப்பது ?

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க வேண்டும் என்றும், அதற்குரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் சேலம் மாவட்ட தமிழ்நாடு அதிகாரப்பூர்வ வலைத்தளமான salem.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : 

M.A. Sociology/ MSW / Social Work / psychology with Computer knowledge ஆகிய படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஊதிய விகிதத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.! வெளியானது சூப்பர் அறிவிப்பு

எவ்வாறு விண்ணப்பிப்பது :

1.salem.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

2.சேலம் மாவட்ட தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைக் கிளிக் செய்யவும்.

3.வழிமுறைகளை கவனமாகப் படிக்க வேண்டும்.

4.அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி விண்ணப்ப படிவத்தை விண்ணப்பிக்கவும் அல்லது பதிவிறக்கவும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையும் படிங்க..தேசிய திறனாய்வு தேர்வு நிறுத்தம்.. என்சிஇஆர்டி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம்