Asianet News TamilAsianet News Tamil

தேசிய திறனாய்வு தேர்வு நிறுத்தம்.. என்சிஇஆர்டி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம்

தேசிய திறனாய்வு தேர்வு அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.

National Talent Search Examination on hold till further orders NCERT
Author
First Published Oct 7, 2022, 3:45 PM IST

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆன என்சிஇஆர்டி (NCERT) இத்திட்டத்தை மேலும் செயல்படுத்த கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளிக்காததால் தேசிய திறனாய்வு தேர்வினை நிறுத்தி வைத்துள்ளது.

National Talent Search Examination on hold till further orders NCERT

கல்வி அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்ட மத்திய துறை திட்டம் மார்ச் 31, 2021 வரை அங்கீகரிக்கப்பட்டது. மேலும் திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.தேசிய திறனாய்வு தேர்வு திட்டம் என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் (MOE) முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒரு மத்திய துறை திட்டமாகும்.

இதையும் படிங்க..வேலைவாய்ப்பை தேடுகிறீர்களா ? இதோ சூப்பர் செய்தி.. தமிழக அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் - முழு விபரம்

என்சிஇஆர்டி என்பது என்டிஎஸ் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாகும். இத்திட்டம் மார்ச் 31, 2021 வரை அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் தற்போதைய வடிவத்தில் மேலும் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மேலும் மேலும் உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

National Talent Search Examination on hold till further orders NCERT

முனைவர் பட்டம் வரை சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகிறது.  10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாதம் ரூ. 1,250, யுஜி, பிஜியின் போது மாதம் ரூ. 2,000 மற்றும் பிஎச்டி மட்டத்தில் யுஜிசி விதிகளின்படி உதவித்தொகை பெறுவார்கள்.

இதையும் படிங்க..போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி - எவ்வாறு விண்ணப்பிப்பது ?

Follow Us:
Download App:
  • android
  • ios